Home >> News



ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் 27.04.2019, சனிக்கிழமை அன்று 13வது ஆண்டு விழா கல்லூரியின் செயலர் திரு.N.சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் கவிதா சுப்ரமணியன் அவர்கள் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் S.அபிராமசுந்தரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். முனைவர் கவிதா சுப்ரமணியன் அவர்கள் தமது உரையில் ஆசிரியர் மூன்று வகைப்படுவர் 1. சுமாரான ஆசிரியர் 2. சிறந்த ஆசிரியர் 3. மிகச்சிறந்த ஆசிரியர் என்று கூறி அவற்றிற்கான விளக்கத்தை கூறினார். மேலும் தனது உரையில் 7C பற்றி எடுத்துரைத்தார். அவையாவன 1. Colourful, 2.Competency, 3.Communication Skill ,4. Character ,5. Courage ,6. Confidence, 7. Common sense இதை கடைபிடித்து ஆசிரியப் பயிற்சி முடித்து செல்லும் பயிற்சி மாணவர்கள் மேற்கூறிய 7C யை கடைபிடித்து மிகச்சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்று தனது உரையில் கூறினார். சூழலை அறிந்து செயல்படும் சமயோஜித புத்தி தேவை என்று இரண்டாமாண்டு முடித்து செல்லும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்பு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக உதவிப்பேராசிரியர் திருமதி.K.மணிமேகலை விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். உதவிப்பேராசிரியர் முனைவர் பா.அழகுலதா அனைவருக்கும் நன்றி கூறினார்.




more info
The Principal,
J.J College of Education,
Sivapuram(Post),
Pudukkottai - 622 422,
Phone : 04322 261801
E-Mail : jjcollege.pdk@gmail.com