Home >> News



ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் 26.04.2019, வெள்ளிக்கிழமை அன்று கற்றல் கற்பித்தலில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் P.ராஜரெத்தினம், ஹிந்தி துறைத்தலைவர், மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை அவர்கள் கலந்து கொண்டார்கள். ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் S.அபிராமசுந்தரி அவர்கள் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்கள் உலக அறிவை கைகொள்வது, ஆசிரியர்கள் இன்றை உலகின் தேவையை உணர்ந்து கற்பிப்பது இன்றைய சவால்களாக உள்ளது எனக்கூறினார். மாணவர்கள் அறிவையும் சிந்தித்தலையும் மேம்படுத்த ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். பெற்றோரின் கனவை நிறைவேற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக ஆசிரியர் இருக்க வேண்டும். விவேகானந்தரைப் போல் வாழ்க்கையில் சவால்களை சந்திக்க முனைய வேண்டும் என்று கூறினார். நன்கு கற்பிக்கும் திறன்படைத்த ஆசிரியரை மாணவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். உளவியல் அறிந்த ஆசிரியர்கள் அனைத்து விதமான மாணவர்களுக்கும் வழிகாட்டலாம். மாணவர்கள் நிறைய மொழிகளை அறிவதற்கும், கற்பதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். தன்னை சுற்றி நடப்பவற்றை விழிப்போடு கவனிக்க மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவன் தன்னுடைய வளமான எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க ஆசிரியர் நல்ல அறிவுரை பகர்பவராக இருக்க வேண்டும். முன்னதாக உதவிப் பேராசிரியர் திருமதி N.நாகலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் இறுதியில் ஆசிரியப் பயிற்சி மாணவி மெகதாஜ் பர்கானா அனைவருக்கும் நன்றி கூறினார்.




more info
The Principal,
J.J College of Education,
Sivapuram(Post),
Pudukkottai - 622 422,
Phone : 04322 261801
E-Mail : jjcollege.pdk@gmail.com