Home >> News



எமது ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரியில் 20.02.2020 அன்று கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான கை கழுவும் முறை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது மிக விரைவாக பரவி மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றான கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள, எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இத்தகைய நிகழ்ச்சியின் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய விழிபுணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினோம்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் 2 – 14 நாட்களுக்குள் பரவும் நோயின் அறிகுறிகளான தும்மல், இருமல் ஏற்படும்போது கைகளையோ அல்லது கைகுட்டையோ பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தவிர்க்கலாம். அதன்பிறகு கைகளை நன்கு கழுவவேண்டும். கொரோனா வைரஸ் காய்ச்சலை “கை கழுவும் முறை” என்ற நிகழ்வின் மூலம் எங்கள் கல்லூரியில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு B.Ed. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.




more info
The Principal,
J.J College of Education,
Sivapuram(Post),
Pudukkottai - 622 422,
Phone : 04322 261801
E-Mail : jjcollege.pdk@gmail.com