Home >> News



எங்கள் ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் 17.02.2020 (திங்கட்;கிழமை) அன்று “கற்பித்தலில் புதுமை” தலைப்பில் திருமதி.C.மைதிலி, M.Sc.,M.Ed., M.Phil., PGDCA, B.T.Assistant in Science, PUMS, கம்மங்காடு, புதுக்கோட்டை அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் கற்பித்தலில் புதுமைகள் பற்றியும் அதனை எவ்வாறு பள்ளியில் செயல்படுத்துவது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். பள்ளியில் ஆசிரியர் வகுப்பறையை உயிரோட்டமாக கொண்டு செல்வது பற்றியும், வருங்காலத்தில் ஊழல் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதில் விதைப்பது பற்றியும், எடுத்துரைத்தார். பின்லாந்து நாட்டில் 7 வயதில்தான் மாணவர்கள்; பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 5வயதில் பள்ளிக்குச் செல்வதால் கூடுதல் கவனிப்பு தேவை எனவும், அக்கறையுடனும் கற்பித்தல் வேண்டும் எனக் கூறினார். ஆசிரியர் என்பவர் அனைத்துப் பாடங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும, இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற அப்துல்கலாம் கண்ட கனவுகள் வருங்கால மாணவர்கள் கையில் உள்ளது. தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் எப்படி வெற்றியடைவது என்பது பற்றியும் எடுத்துரைத்தார். கலாச்சார சீர்கேடுகள் கொண்ட மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவது பற்றியும் மாணவர்களுக்கு ஏற்ற அறநெறிப்பண்புகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது வழங்குவது பற்றி மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். வகுப்பில் மெல்லக் கற்போருக்கு எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றியும், மேலும் மீத்திறன் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெறுவதற்கு ஆசிரியர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். படைப்பாற்றல், செயல்; வழிக்கற்றல் ஆகியவற்றை வீடியோ பதிவு மூலம் மிகத்தெளிவாக விளக்கினார். பாடங்களை ஆசிரியர்கள் பாடல் மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பது பற்றியும், கதைகள் மூலம் கற்பித்தல் பற்றியும் பாட்டுப்பாடி கதை கூறி மிக அழகாக விளக்கினார். தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது பற்றியும் பாராட்டுதல் மூலம் மாணவர்களை ஈர்த்தல் பற்றியும் ; Brain Storm, Role Play, Field trip, Real world learning, Audio – Video tools பற்றியும் விளக்கினார். 1 முதல் 10 வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் குமுவாகக் கற்றல் - கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். ; கற்பித்தலில் பல புதுமைகள் புனைவது பற்றியும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பயிற்சி ஆசிரியர்களுக்கு பயன்தரும் வகையில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். முன்னதாக உதவிப் பேராசிரியர் T.கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனைவர்.P.அழகுலதா அவர்கள் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிறைவாக உதவிப்பேராசிரியர் A.பீட்டர் ஜோசப் ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.




more info
The Principal,
J.J College of Education,
Sivapuram(Post),
Pudukkottai - 622 422,
Phone : 04322 261801
E-Mail : jjcollege.pdk@gmail.com