Home >> News



எங்கள் ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரியில் 06.02.2020 (வியாழக்கிழமை) அன்று “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் திருமதி. D.கிரேஸ் வினிதா,B.A.B.L., புதுக்கோட்டை அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பட்டியலிட்டு அதற்கான தண்டனைகளையும், சட்டப்பிரிவுகளையும் விளக்கி கூறினார். திருத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் அவை செயல்படும் விதங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அன்றாட வாழ்கையில் நாம் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டுதான் வாழ்கிறோம் எனவும் பெண்களுக்கான காவலன் செயலி பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது, ஒருவேளை சட்டத்திருத்தம் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து தான் தீர்ப்பு வழங்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம். போக்ஸோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர் இருபாலராக இருக்கலாம். குற்றமிழைத்தவர் இருபாலருக்குமே தண்டனை உண்டு. பெண்கள் என்றுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவில் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது துணையுடன் செல்ல வேண்டும். பெண்களுக்கு இதன்மூலம் குற்றங்கள் நடப்பது தடுக்கப்படும். அமில வீச்சு, பெண்களை பின்தொடர்தல், கேலி செய்தல், குழந்தை வன்புணர்வு போன்றவற்றைப் பற்றியும் விளக்கினார்.

சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார். வரதட்சணை கொடுமை, உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம,; ஆகியவற்றை பற்றியும் எடுத்துரைத்தார். தம்பதிகளுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமையும், விவாகரத்தும் குழந்தைகளையே பாதிக்கிறது. அக்குழந்தை பின்னாளில் சமூக விரோதியாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. எனவே நல்ல குடும்ப அமைப்பு, குழந்தைகள் சிறந்தவராக வளர வழி வகுக்கிறது. பெண்கள் படித்து அனைவரும் வேலைக்கு செல்லவேண்டும். இச்சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தைரியமாக சமாளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பயிற்சி ஆசிரியர்களுக்கு பயன்தரும் வகையில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

முன்னதாக உதவிப்பேராசிரியர் K.ரம்யா அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினரை பொன்னாடை போhத்தி கௌரவித்தார். நிறைவாக உதவிப்பேராசிரியர் T.கலைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.




more info
The Principal,
J.J College of Education,
Sivapuram(Post),
Pudukkottai - 622 422,
Phone : 04322 261801
E-Mail : jjcollege.pdk@gmail.com